TNPSC Thervupettagam

பல்வேறு படைப்பிரிவுகளில் புதிய நியமனங்கள்

April 1 , 2024 267 days 283 0
  • தேசியப் புலனாய்வு முகமை (NIA), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் (BPRD) ஆகியவற்றுக்கான புதிய தலைவர்களின் பெயர்களுக்கு அமைச்சரவையின் நியமனக் குழுவானது அங்கீகாரம் அளித்துள்ளது.
  • தேசியப் புலனாய்வு முகமையின் புதியத் தலைவராக மகாராஷ்டிர பணிப் பிரிவு அதிகாரி சதானந்த் வசந்த் டேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது மக்களின் உயிர்களைக் காப்பாற்றச் செய்ததற்காகவும் தீவிரவாதிகளை வெகுவாக எதிர்க்கச் செய்ததற்காகவும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.
  • 1991 ஆம் ஆண்டு பணித்தொகுதியைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரி பியூஷ் ஆனந்த் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 1990 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியான ராஜீவ் குமார் ஷர்மா காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்