TNPSC Thervupettagam

பல்வேறு புதிய மசோதாக்கள் மற்றும் திருத்தங்கள்

July 2 , 2024 145 days 310 0
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த மசோதாவானது, அந்த ஆணையத்தின் தலைவரின் வயது வரம்பை 70 வயதிலிருந்து 75 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தச் செய்வதற்காக நிலச் சீர்திருத்தங்கள் (நில வைத்திருப்பிற்கான உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஒரு மசோதாவினை சட்ட சபை நிறைவேற்றியுள்ளது.
    • திருமணமாகாத ஆண்களுக்கு இணையாக திருமணமாகாதப் பெண்களுக்கும் இந்தத் திருத்தம் உரிமைகளை வழங்குகிறது.
  • 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்து உள்ளது.
    • சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
    • சட்டவிரோதமான முறையில் விற்கப்படும் மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால், அவற்றினை விற்பவர்களுக்கு ஆயுள் கால சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு கொள்முதல் ஒப்பந்த வெளிப்படைத் தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவினை சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
    • இது தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழக லிமிடெட் ஆகியவற்றை இச்சட்டத்தின் 16வது பிரிவின் (j) உட்பிரிவின் வரம்பிலிருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்