TNPSC Thervupettagam

பல்ஸ் போலியோ நோய் தடுப்புத் திறனூட்டல்

January 28 , 2018 2365 days 1749 0
  • ஆண்டு தோறும் ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய நோய்த் தடுப்புத் திறனூட்டல் தினத்தின் ஒரு பகுதியாக 2018ஆம் ஆண்டிற்கான பல்ஸ் போலியோ நோய்த் தடுப்புத் திறனூட்டல் திட்டம் (Pulse Polio Immunization – PPI) தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 5 வயதிற்கு குறைவான 17 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
  • போலியோ வைரஸானது குழந்தைகளுக்கு பக்கவாதத்தை (Paralysis) ஏற்படுத்தவல்லது. இந்த பிரச்சனையானது கடினமான தொடர்ந்த பக்கவாதம் (Acute Flacid Paralysis – AFP) என்றழைக்கப்படுகின்றது.
  • தசைகளின் திடீர் பலவீனம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் மூட்டுக் காய்ச்சல் போன்றவை போலியோவின் அறிகுறிகளாகும்.
  • 2014-ஆம் ஆண்டு இந்தியாவானது வைரஸ் தொற்றின் பாதிப்பற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • போலியோ வைரஸிற்கு எதிராக இந்தியாவில் உபயோகிக்கப்படும் தடுப்பூசிகளாவன
    • உட்செலுத்தத்தக்க செயல்படுத்தப்படாத போலியோ தடுப்பூசி (IPV – Injectable Inactivated Polio Vaccine).
    • வாய்மொழி வழியேயான போலியோ தடுப்பூசி (OPV – Oral Polio Vaccine)
  • IPV ஆனது அண்மையில் உலகளாவிய நோய்த்தடுப்புத்திறனூட்டல் திட்டத்தில் (UIP – Universal Immunisation Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • IPV வைரஸ்களானது தனியாகவும் அல்லது வாய்மொழி போலியோ தடுப்பூசி போன்ற பிற தடுப்பூசிகளோடு கலந்தும் போலியோவிற்கு எதிராக பயன்படுத்தத்தக்க போலியோ தடுப்பூசியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்