December 16 , 2024
6 days
46
- அரியானாவின் சுல்தான்பூர் தேசியப் பூங்காவில் ஓர் அசாதாரண குளிர்கால வலசை போகும் பளிங்கு வாத்து/பளிங்கு தாரா தென்பட்டுள்ளது.
- 1990 ஆம் ஆண்டு முதல் சுல்தான்பூரில் இந்த இனம் தென்படவில்லை.
- இந்த இனம் ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் உலகளவில் "மிக எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்" ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- இவை ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டவை என்பதோடு இங்கு இவை கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.
- 2022 ஆம் ஆண்டில் பிந்தவாஸ் ஈரநிலத்தில் கடைசியாக தென்பட்டது.
- இவை கிழக்கு மற்றும் மேற்கு மத்தியத் தரைக் கடல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று வெவ்வேறு பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதாக அறியப்படுகிறது.
Post Views:
46