தேசிய கல்விக் கருவூலம் (National Academic Depository - NAD) என்பது பல்வேறு கல்வி நிறுவனங்கள் / பள்ளி குழுமங்கள் / தகுதி மதிப்பீட்டு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட கல்வி சார்ந்த சான்றிதழ்களின் இணைய சேமிப்புத் தளம் ஆகும். இந்த சேவையானது 24 மணி நேரமும் இயங்கும்
பட்டதாரி மற்றும் பட்டய சான்றிதழ்கள், மதிப்பெண் திறன் சான்றிதழ்கள், போன்றவற்றை இக்கருவூலத்தில் சேமித்து வைக்கலாம்.
தேசிய கல்விக் கருவூலத்தை செயல்படுத்தும் பொறுப்பும் அங்கீகாரமும் பல்கலைக் கழக மானியக் குழுவை (University Grants Commission) சேரும்.
தேசிய கல்விக் கருவூலம் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கருவூலங்களைக் கொண்டது.
NSDL தரவுத்தள மேலாண்மை நிறுவனம் (NSDL Database Management Limited - NDML)
CDSL வென்சர்ஸ் லிமிடெட் (CVL)
இதுபோல் கல்வித் தகுதி ஆவணங்களை இணைய வழி சேமிப்புத் தளங்களில் சேமித்து வைப்பது எளிய முறையில் வேகமாக ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள உதவுவது மட்டுமின்றி போலி ஆவணங்களை தடுக்கவும் உதவும்.
இணைய வழி பதிவிற்கும், பயன்பாட்டிற்கும் ஆதார் தரவுதளம் உபயோகிக்கப்படும். ஆதார் எண் இல்லாதபட்சத்தில் NAD அடையாள எண் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் டிஜிட்டல் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.