TNPSC Thervupettagam

தடுப்பூசி அட்டை கட்டாயம்

February 24 , 2018 2496 days 904 0
  • கேரள மாநில அரசானது தனது புதிய சுகாதாரக் கொள்கையில், மாநிலத்தில் முதலாம் வகுப்பிற்கான பள்ளிச் சேர்க்கைக்கு குழந்தையின் தடுப்பூசி அட்டையை (Vaccination Card) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது.
  • ஐந்து வயதிற்கு குறைவான அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி திறனூட்டப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வரைவு மருத்துவ கொள்கைக்கு மாநில கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • முதலாம் வகுப்பு பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி அட்டைச் சான்றிதழ்களின் கட்டாய சமர்ப்பித்தல் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து  நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  • மேலும் இந்த வரைவு கொள்கைப்படி, திருநங்கைகளை மாநில சுகாதார  கட்டமைப்பின் கீழ் கொண்டுவர, திருநங்கைகளுக்கென மருத்துவ மையங்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்