TNPSC Thervupettagam

பழங்கால துறைமுக நகரம் பூம்புகார்

March 26 , 2019 1943 days 1372 0
  • பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வுத் துறையானது பழங்காலத் துறைமுக நகரமான பூம்புகாரின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறது.
  • இந்தத் திட்டமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (DST - Department of Science and Technology) நிதியளிக்கப்படுகிறது.
  • காவிரிப்பூம்பட்டினம் அல்லது பூம்புகார் என்பது சங்க காலத்தில் காவிரியின் முகத்துவாரத்தில் சோழப் பேரரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பழங்காலத் துறைமுக நகரமாகும்.
  • இது ஆசியா, அரேபியா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த நாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டிருந்தது.
  • சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற சங்க காலம் மற்றும் சங்க காலத்திற்கு பின் தோன்றிய இலக்கியங்களில் பூம்புகார் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
  • ஆனால் ஏறத்தாழ கி.மு. 1100 கால கட்டத்தில், அது திடீரென்று செயலற்றதாகிவிட்டது.
  • இந்த ஆராய்ச்சித் திட்டமானது பூம்புகாரின் வரலாற்றையும் நாட்டில் பழங்காலத் தமிழர்களின் சமூக-கலாச்சாரப் பரிணாம வளர்ச்சியை வெளிக் கொண்டு வருவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்