TNPSC Thervupettagam

பழங்குடி அமைப்புகள் நுழைவு அனுமதிப் படிவ முறையைக் கோருதல்

March 4 , 2020 1638 days 515 0
  • மேகாலயாவில் உள்ள பழங்குடியின அமைப்புகள் வெளிஆட்கள் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தக்கூடிய நுழைவு அனுமதிப் படிவ முறையைக் கோருகின்றன.
  • இது அனுமதிப் படிவ முறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு மாநிலத்திற்குச் செல்ல அல்லது அந்த மாநிலத்தில் தங்குவதற்கு வெளியாட்களால் சமர்ப்பிக்கப்படும் ஒரு ஆவணமாகும்.
  • இந்த இடத்தின் உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு நுழைவு அனுமதிப் படிவ முறை உதவுகின்றது. மேலும் அங்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களையும் வெளியாட்களின் அத்துமீறலையும் இது தடுக்கின்றது.
  • தற்போது, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்கள் ஏற்கனவே இந்த முறையின் கீழ் உள்ளன.
  • நுழைவு அனுமதிப் படிவமானது அந்தந்த மாநில அரசால் வழங்கப் படுகின்றது.
  • அனுமதிப் படிவம் என்பது வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைச் சட்டம் 1873ன் நீட்டிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்