TNPSC Thervupettagam

பழங்குடி இனச் சட்டங்கள் குறித்த தீர்மானங்கள் - திரிபுரா

February 15 , 2020 1658 days 555 0
  • திரிபுரா மாநிலப் பழங்குடியினர் பகுதி தன்னாட்சி மாவட்ட மன்றமானது (Tripura Tribal Areas Autonomous District Council - TTAADC) மூன்று பழங்குடி இனங்களின் சட்டங்கள் குறித்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த 3 பழங்குடி இனங்களாவன:
    • மிசோ
    • கைபெங் மற்றும்
    • மால்சம்
  • ஆறாவது அட்டவணையின்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் தொழில்நுட்ப ரீதியாக மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடக் கூடிய பழங்குடிப் பகுதிகளைக் கொண்டுள்ளன.
  • அவற்றின் மீது சில சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட மன்றங்கள் மற்றும் பிராந்திய மன்றங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இதன்படி ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தன்னாட்சி மாவட்டமாகும். மேலும் ஆளுநர் அறிவித்தலின் மூலம் அந்த பழங்குடியினப் பகுதியின் எல்லைகளை மாற்ற அல்லது பிரிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்