TNPSC Thervupettagam

பழங்குடியினக் கலைஞர் ‘கிட்னா’

April 18 , 2025 3 days 73 0
  • “கிட்னா” என்று அழைக்கப்படுகின்ற மிகவும் புகழ்பெற்ற பழங்குடியினக் கலைஞர் R. கிருஷ்ணன் சமீபத்தில் காலமானார்.
  • இவர் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆலு குரும்பர் என்ற சமூகத்தினைச் சேர்ந்த நபர் ஆவார்.
  • சுமார் 30 ஆண்டுகளாக, கிருஷ்ணன் தனது கிராமத்தில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாறை ஓவியக் கலையால் ஈர்க்கப்பட்டு, தனது சமூகத்தின் தனித்துவமான கலைப் பாணியைத் தனியொருவராகப் பிரபலப்படுத்தினார்.
  • வனப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை நிறமிகளை மட்டுமே பயன்படுத்தி, ஆலு குரும்பர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆயிரக்கணக்கான ஓவியங்களை அவர் உருவாக்கினார்.
  • அதன் இயற்கையான வண்ணப்பூச்சுகள் மற்றும் தகுநய நடை கொண்டதாக வகைப் படுத்தப் படும் “எழுத்துப் பாறை” பாறை ஓவியக் கலைத் தளத்தில் காணப்படும் ஆலு குரும்பக் கலை, மற்ற கலை வடிவங்களிலிருந்து அதனை வேறுபடுத்திக் கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்