TNPSC Thervupettagam

பழங்குடியினப் பெண்களுக்கான சுகாதார வசதிகள் குறித்த அறிக்கை

August 17 , 2023 340 days 197 0
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவானது அது தொடர்பான அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
  • நாட்டிலுள்ள பழங்குடியின மக்களின் சுகாதார நிலைகள் குறித்தத் தரவுகளை மத்திய அரசு வெவ்வேறு நிலைகளில் பிரிக்கவில்லை என்பதை இது எடுத்துரைக்கிறது.
  • இது M.P. ஹீனா காவிட் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
  • அரிவாள் வடிவ இரத்தசோகை நோய் மற்றும் G-6 PD குறைபாடு போன்ற மரபணுக் குறைபாடுகள் பழங்குடியினர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
  • மற்ற சமூகக் குழுவினருடன் ஒப்பிடும் போது தொழுநோய், காசநோய், காலரா போன்ற தொற்று நோய்களின் பாதிப்பு இந்த இனத்தவரில் அதிகமாக உள்ளது.
  • இந்தியாவின் சராசரிப் பாலின விகிதமான 930 என்ற மதிப்புடன் ஒப்பிடும் போது அந்தக் குழுவினரில் 990 என்றப் பாலின விகிதம் பதிவாகியுள்ளது.
  • குழந்தை திருமணம், இளம் வயதில் கருவுறுதல், குறைவான மதிப்பிலான உடல் பருமன் அளவு மற்றும் அதிகளவிலான இரத்த சோகை ஆகியவை பழங்குடிப் பெண்களிடையே அதிக விகிதத்திலான உயிரிழப்பினை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்