TNPSC Thervupettagam

பழங்குடியினர் மேம்பாட்டு அறிக்கை 2022

December 4 , 2022 592 days 351 0
  • பாரத் ஊரக வாழ்வாதார அறக்கட்டளையானது, அதன் முதல் வகை பழங்குடியினர் மேம்பாட்டு அறிக்கையினை (2022) வெளியிட்டுள்ளது.
  • இது அகில இந்திய அளவில் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள பழங்குடியின சமூகங்களின் நிலையை மதிப்பிடுகிறது.
  • இது வாழ்வாதாரம், வேளாண்மை, இயற்கை வளங்கள், பொருளாதாரம், இடம்பெயர்வு, ஆளுகை, மனித மேம்பாடு, பாலினம், சுகாதாரம், கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்துப் பகுப்பாய்வு செய்கிறது.
  • இந்தியாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டின் மக்கள்தொகையில் 8.6% ஆகும்.
  • இந்தியாவின் 80% பழங்குடியினச் சமூகத்தினர் மத்திய இந்தியாவில் வாழ்கின்றனர்.
  • 257 பட்டியலிடப்பட்ட பழங்குடியின மாவட்டங்களில், 230 (90%) மாவட்டங்கள் காடுகள் அல்லது மலைகள் நிறைந்தவை அல்லது வறண்ட பகுதிகளாகும்.
  • ஆனால் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மக்கள் தொகையில் 80% ஆக உள்ளனர்.
  • அவர்கள் வண்டல் சமவெளிகள் மற்றும் வளமான ஆற்றுப் படுகைகளிலிருந்து நாட்டின் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பகுதிகளான மலைகள், காடுகள் மற்றும் வறண்ட நிலங்களுக்குள் இடம் பெயர்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்