TNPSC Thervupettagam

பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை

March 18 , 2025 13 days 86 0
  • தமிழ்நாடு அரசானது, பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கையினை உருவாக்கச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • பழங்குடியினர் சமூகங்களின் உறுப்பினர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களை மிக எளிதாக அணுகுவதை உறுதி செய்வதையும், பல்லுயிர்ப் பெருக்க வளங்காப்பில் அப் பிரிவினர் கொண்டுள்ள ஒரு பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதையும், பயன்படுத்தச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெரும் தனித்துவமான கலாச்சார அடையாளங்களைக் கொண்ட சுமார் 37 பழங்குடியினர் சமூகங்கள் உள்ளன.
  • இந்தக் கொள்கையானது பகுதி சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக  ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மற்றும் கடம்பூர் மலைப் பகுதிகள் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலைகள் ஆனது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்