மாநிலங்களவையானது அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதா, 2024 மற்றும் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர்) ஆணை திருத்த மசோதா, 2024 ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளது.
ஒடிசாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் பல புதிய சமூகங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறையை இது தெளிவுபடுத்துகிறது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் தற்போதுள்ள பழங்குடியினரின் ஒத்த (இணை பொருள்) சொற்கள் மற்றும் ஒலிப்பு மாறுபாடுகளைச் சேர்ப்பதற்கும் இது உதவுகிறது.
இந்தக் கூடுதல் சேர்க்கையில் ஒடிசாவில் நான்கு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று என ஏழு எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTG - (பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் உட்பிரிவு) சேர்க்கப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள PVTG சமூகங்கள்
புயான் பழங்குடியினக் குழுவிற்கு இணையான சொற்களாக பௌரி புயான் மற்றும் பெளடி புயான்;
புன்ஜியா பழங்குடியினருக்கு இணையான சொல்லாக சுக்டியா புஞ்சியா;
போண்டோ போராஜா பழங்குடியினரின் உட்பிரிவாக போண்டோ; மற்றும்
மன்கிர்டியா பழங்குடியினருக்கு இணையான சொல்லாக மன்கிடியா.
ஆந்திரப் பிரதேசத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள PVTG சமூகங்கள்
போர்ஜா பழங்குடியினருக்கு இணையான சொற்களாக போண்டோ போர்ஜா மற்றும் கோண்ட் போர்ஜா;
சவராஸ் பழங்குடியினருக்கு இணையான சொல்லாக கொண்டா சவராஸ்.