TNPSC Thervupettagam

பழமையான அறியப்பட்ட மனித வைரஸ்கள்

May 26 , 2024 53 days 167 0
  • 50,000 ஆண்டுகள் பழமையான நியாண்டர்டால் எலும்புகளில் பண்டைய வைரஸ்கள் இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வைரஸ்களின் உடைந்த துண்டுகள் பண்டைய காலத்தில் வைரஸ்களின் "சாத்தியமான இருப்பை" பரிந்துரைக்கின்றன.
  • நியாண்டர்தால்கள் மீதான இந்த வைரஸ்களின் தாக்கம் சரியாக தெரியவில்லை.
  • நியாண்டர்தால்கள் அடினோவைரஸ், ஹெர்பெஸ்வைரஸ் மற்றும் பாப்பிலோமா வைரஸ் போன்ற மூன்று பொதுவான நவீன மனித வைரஸ்களால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • நவீன கால மனிதர்களில், அடினோவைரஸ்கள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் சிவந்த கண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் மனிதரை தாக்கும் வைரஸ்களின் பழமையான எச்சங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்பதோடு,  இது இதற்கு முன்னதாகக் கண்டறியப் பட்ட பழமையான வைரசின் ஒரு முந்தைய சாதனையினை சுமார் 20,000 ஆண்டுகள் வித்தியாசத்தில் விஞ்சியது.
  • முந்தைய சாதனையானது, சைபீரியாவில் 31,000 ஆண்டுகள் பழமையான குழந்தைப் பற்களில் காணப்பட்ட ஒரு பொதுவான சளிப் பாதிப்பினை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்