TNPSC Thervupettagam

பழவேற்காடு சரணாலயத்திற்குட்படாத ஏரி பகுதிகள்

December 30 , 2024 14 days 106 0
  • பழவேற்காடு பறவைகள் சரணாலய எல்லைக்கு வெளியே உள்ள ஏரி பகுதிகளை 2017 ஆம் ஆண்டு சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (TNSWA) கூறி உள்ளது.
  • சதுப்பு நிலங்களை, சதுப்பு நிலங்கள் சாராதப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதைத் தடுக்க இது உதவும்.
  • தற்போது, ​​பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆனது 10 கிலோமீட்டர் அளவில் சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலத்தினைக் கொண்டுள்ளது.
  • பழவேற்காடு ஏரி உட்பட 2011 ஆம் ஆண்டின் தேசியச் சதுப்பு நில இருப்பு மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஈரநிலங்களும் 4(2) வது விதியின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • ஒரு சதுப்பு நிலம் ஆனது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்தப் பாதுகாப்பு என்பது கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
  • சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பு மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுதல் அல்லது அவற்றின் விரிவாக்கம் போன்ற சதுப்பு நிலங்கள் சாராதப் பயன்பாட்டிற்காக மாற்றி அமைப்பதை இந்த விதி தடை செய்கிறது.
  • திடக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள், மிகவும் அபாயகரமானப் பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப் படாத கழிவுகளை சதுப்பு நிலங்களில் கொட்டுவதையும் இது தடை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்