13 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பழவேற்காடு (புலிகாட்) பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை மறுமதிப்பீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
இது அதன் எல்லையிலிருந்து கிராமங்களை விலக்குவதன் மூலம் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தைக் குறைக்கும்.
தற்போதைய இயல்புநிலை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் மேற் கொள்ளப் படும் துறைமுக விரிவாக்கத் திட்டம் மற்றும் தொழில்துறைப் பூங்கா ஆகியவை அதன் எதிர்கால செயல்பாடுகளை அச்சுறுத்துகின்றன.
720 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியின் பெரும்பகுதி ஆந்திரப் பிரதேசத்திலும், 20 சதவீதத்திற்கும் குறைவான பகுதி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
1980 ஆம் ஆண்டில், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் இந்த பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், சரணாலயத்திற்குள் உள்ள பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடும் இறுதி அறிவிப்பு 26Aவது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட வேண்டும்.