TNPSC Thervupettagam

பழுப்பு நிற குள்ளக் கோள்கள்

May 13 , 2020 1660 days 770 0
  • சர்வதேச வானியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவானது லுஹ்மேன் 16A என்ற பழுப்பு நிற குள்ளக் கோளின் மேற்பரப்பின் மீது சில மேகப் பட்டைகளைக் கண்டறிந்துள்ளது.
  • லுஹ்மேன் 16A என்பது மிகப் பரவலாக பழுப்பு நிற குள்ளக் கோள் என்று அறியப் படுகின்றது.
  • இது வேலா நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள பைனரியான பழுப்பு நிறக் குள்ளக் கோள்களின் ஜோடிகளில் ஒன்றாக உள்ளது.
  • இவை சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்களில் காணப்படுவதைப் போன்றே  உள்ளன.
  • லுஹ்மேன் ஆனது பைனரி அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இது இரண்டாவது பழுப்பு நிற குள்ளக் கோளையும் (லுஹ்மேன் 16B) கொண்டுள்ளது.
  • ஆல்பா சென்டாவுரி மற்றும் பர்னார்டு போன்ற நட்சத்திரங்களுக்குப் பிறகு, இது நமது சூரியனுக்கு மிக அருகில் 6.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மூன்றாவது குள்ளக் கோளாக விளங்குகின்றது..
  • முதன்முறையாக  ஆராய்ச்சியாளர்களால் போலாரிமெட்ரி என்ற செயல்முறை  பயன்படுத்தப்பட்டது.
  • ஆராய்ச்சியாளர்கள் சிலியில் உள்ள ஒரு மிகப்பெரிய தொலைநோக்கியில் இந்த உபகரணத்தைப் பயன்படுத்தினர்.
  • இது மேகக் கூட்டங்கள் அல்லது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள வளிமண்டல மேகங்களின் பண்புகளைத் தீர்மானிக்க இருக்கின்றது.

இது பற்றி
  • பழுப்பு நிறக் குள்ளக் கோள்கள் என்பவை நட்சத்திரங்களை விட இலகாகவும் ஆனால் கோள்களை விட மிகக் கனமாகவும் உள்ள பொருள்களாகும்.
  • பழுப்பு நிறக் குள்ளக் கோள்களின் நிறையானது மிகப்பெரிய கோள்களுக்கிடையே இடைநிலைத் தன்மை கொண்டதாகவும் மிகச்சிறிய முக்கிய தொடர் நட்சத்திரங்களைக் கொண்டதாகவும் உள்ளதன் காரணமாக இவை இழந்த நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
  • இவை பொதுவாக வியாழனின் நிறையைப் போன்று 13 முதல் 80 மடங்கு நிறையைக் கொண்டுள்ளன.
  • இவற்றின் நிறை மிகவும் சிறியதாக உள்ளதால் இது ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக அவற்றின் ஹைட்ரஜனின் இணைவைத் தக்க வைத்துக் கொள்ளாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்