TNPSC Thervupettagam

பழைமையான அணைகள் குறித்து ஐ.நா.வின் அறிக்கை

February 3 , 2021 1323 days 646 0
  • இந்த அறிக்கை ‘Ageing water infrastructure: An emerging global risk’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான அணைகள் உள்ள பகுதிகளின் அருகில் வாழ்வார்கள்.
  • உலகம் முழுவதும் 58,700 பெரிய அணைகள் உள்ளன.
  • அவற்றில் பெரும்பாலானவை 1930 முதல் 1970 வரை 50 முதல் 100 ஆண்டுகள் கால ஆயுட்காலத்துடன் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளன.
  • இந்தப் பகுப்பாய்வு இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜிம்பாபே மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகளில் உள்ள பழைமையான அணைகள் குறித்த ஆய்வுகளையும் உள்ளடக்கியது ஆகும்.
  • உலகின் மொத்த பெரிய அணைகளில் 55% அல்லது சுமார் 32,716 பெரிய அணைகள் இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் என்ற நான்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.
  • இந்தச் சிக்கல்கள் 25 நாடுகளில் எதிர்கொள்ளப் படுகிறது.
  • 93% பெரிய அணைகள் இந்த 25 நாடுகளில் அமைந்து உள்ளன. 

இந்தியாவில் பழைமையான அணைகள்

  • இந்தியாவில் 1,115க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2025 ஆம் ஆண்டில் 50 ஆண்டுகள் பழைமையானதாக உருவெடுக்கும்.
  • 2050 ஆம் ஆண்டில் நாட்டில் 4,250க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலுள்ளதாக இருக்கும்.
  • 64 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டில் 150 ஆண்டுகளுக்கும் மேலுள்ளதாக இருக்கும்.
  • கேரளாவின் முல்லைப் பெரியார் அணை பழுதடைந்தால், சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஆபத்திற்குள்ளாவர்.
  • இந்த அணை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்