ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 09 அன்று பவள முக்கோண தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது 2012 ஆம் ஆண்டு ஜுன் 10 அன்று உலகப் பெருங்கடல்கள் தினமாக முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
கடல் பாதுகாப்பு, அதிலும் குறிப்பாக பவள முக்கோணப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
பவள முக்கோணம்
பவள முக்கோணம் ஆனது உலகில் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மையமாக விளங்குகின்றது.
இது கடல்களின் அமேசான் எனவும் அழைக்கப்படுகின்றது.
இது ஏறக்குறைய இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் திமோர் – லெஸ்தி ஆகிய பகுதிகளின் வெப்ப மண்டலக் கடல் நீரின் முக்கோணப் பகுதியாகும்.
இது காங்கோ வடிநிலம் மற்றும் அமேசான் மழைக் காடுகள் ஆகியவற்றுடன் இணைந்து பூமியில் உள்ள 3 பெரிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.