சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சமீபத்திய ஒரு உலகளாவிய மதிப்பீடு ஆனது இது தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை வெளிப்படுத்தி உள்ளது.
44 சதவீதப் பவளப்பாறைகளை உருவாக்கும் பவள இனங்கள் தற்போது அழியும் ஒரு அபாயத்தில் உள்ளன.
2008 ஆம் ஆண்டில் IUCN அமைப்பானது கடைசியாக இது குறித்த மதிப்பீட்டினை மேற் கொண்டபோது இருந்த 33 சதவீதத்திலிருந்து இந்த எண்ணிக்கையானது தற்போது அதிகரித்துள்ளது.
சமீபத்தியக் கண்டுபிடிப்புகள் ஆனது, 892 வகையான மிதவெப்ப நீரில் காணப்படும் பவளப்பாறைகளில் 44 சதவீதம் ஆனது பல அச்சுறுத்தல்களின் காரணமாக ஆபத்தை எதிர்கொள்கின்றன.
இந்த இனங்களில், 56 இனங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை (15 சதவீதம்), 251 அருகி வரும் இனம் (67 சதவீதம்) மற்றும் 33 மிக அருகி வரும் இனம் (9 சதவீதம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பவளப் பாறைகள் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடையத் தொழில்துறைகள் மூலம் ஆண்டிற்கு 375 பில்லியன் டாலர் வருமானத்தினை வழங்குகின்றன.