தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Suganthi Devadason Marine Research Institute - SDMRI) பாறை ஆராய்ச்சிக் குழு வாலைத் என்ற தீவுப் பகுதியில் அழிவை ஏற்படுத்தக் கூடிய பாசியின் ஊடுருவலைக் கண்டறிந்துள்ளது.
இந்த ஊடுருவியுள்ள இனங்கள் கப்பாப்ஹய்கூஸ் ஆல்வாரீசெய் என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்தக் கடற்பாசிகள் பவளப் பாறைகளின் மீது படர்ந்து அவற்றை அழிக்கின்றன.
இது பவளப் பாறைகள் உள்ள மன்னார் வளைகுடாவின் வாலைத் தீவிற்குப் பரவியுள்ளது. இது கடல்சார் தேசியப் பூங்காவின் புதிய பவளப் பாறைகளை அழிக்கத் தொடங்கியுள்ளது.
2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு ஆணையானது, தூத்துக்குடி கரையோரத்தின் தெற்குப் பகுதி மற்றும் பாக் ஜலசந்தியின் வடக்கில் உள்ள நீர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மட்டும் கடற் பாசிகளைப் பயிரிட அனுமதியளித்துள்ளது.
ஊடுருவிய இனங்கள்
ஊடுருவிய இனங்கள் என்பது குறிப்பிட்ட இடத்தை வாழிடமாகக் கொண்டிராத (இயற்கையாக அல்லது தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்) இனங்களாகும்.
இது சுற்றுச் சூழல், மனிதப் பொருளாதாரம் மற்றும் மனித வளம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிக்கும் என நம்பப்படும் அளவிற்குப் பரவக் கூடிய திறன் கொண்டது.