TNPSC Thervupettagam

பவளப் பாறைகள் வெளுத்தல்

June 19 , 2020 1624 days 862 0
  • ஏறத்தாழ 21 தீவுகளில் பரவியுள்ள மன்னார் வளைகுடா ஆனது வாழ்வாதாரம் தொடர்பாக ஏற்படும் மனித அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
  • இந்தத் தீவுகள் மற்றும் பவளப் பாறைகள் கூட்டாக இணைந்து மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவை அமைக்கின்றன.
  • GOMல் (Gulf of Mannar) உள்ள பவளப்பாறைகள் பெரும்பாலும் கோடைக் காலத்தில் நீரின் வெப்பநிலை 30° செல்சியசிற்கு மேல் செல்லும் போது வெளுத்துப் போகின்றன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில்  நீரின் வெப்பநிலை குறைந்த பின் இவை மீண்டும் மீட்சி பெறுகின்றன.
  • சமீபத்திய ஒரு ஆய்வின்படி ஆம்பன் மற்றும் நிசர்கா புயல்கள் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளை அதிக அளவில் வெளுத்துப் போவதிலிருந்துப் பாதுகாத்துள்ளன.
  • இந்த 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுகளுடன் கூடிய புயல் காற்றுகள் கோடைக் காலத்தில் கடல் நீரின் வெப்பநிலையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன.
  • தற்பொழுதைய காலநிலையானது இதே நிலையில் நீடித்தால் பவளப் பாறைகள் எந்தவொரு இறப்பும் ஏற்படாமல் ஜூலை மாத இறுதியில் முழுவதும் மீட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • கடலில் கழிவுநீர் குறைவாகக் கலத்தல், தொழிற்சாலை & மனித நடவடிக்கைகள், பொது முடக்கத்தின்போது மீன் பிடிக்கத் தடை ஆகியவை மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பவளப் பாறையின் வளம், மற்றும் பவளப் பாறைகள் வேகமாக மீட்சி  பெறுதல் ஆகியவற்றிற்கு உதவி புரிகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்