கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) வரவிருக்கும் வாரங்களில் வெப்ப அழுத்தத்தின் காரணமாக மிகக் கடுமையான காலத்தை எதிர்கொள்ளும்.
கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பார்க் ஆனது உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும்.
இது தோராயமாக இத்தாலி நாட்டின் அளவை ஒத்தது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பவளக் கடலில் இந்தப் பவளப் பாறை அமைந்துள்ளது.
கிரேட் பேரியர் ரீஃப் ஆனது விண்வெளியில் இருந்தும் காணப்படக் கூடியதாகும். மேலும் இது உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒரு ஒற்றைக் கட்டமைப்பாகும்.
இது 1981 இல் உலக பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
பவளப்பாறைகள் கடலில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியமான இடங்களாகும்.
கடல் வெப்பநிலையிலிருந்து வெப்ப அழுத்தம் மற்றும் அந்த வெப்பத்தின் காலம் ஆகியவற்றால் பவளப்பாறை வெளுக்க நேரிடுகிறது.
பவளங்களை வெளுத்தல் என்று பெரும்பாலும் அழைக்கப்படுவது உண்மையில் பவளத்தின் மீது வாழும் பாசிகளின் இழப்பாகும்.
பவளப் பாறைகள் வெப்பமண்டல நீர் பகுதிகளில் பொதுவாக 70 முதல் இருந்து 80 வரையிலான பாரன்ஹீட்டுகளில் வளர்கிறது.