TNPSC Thervupettagam

பவானிசாகர் அணையால் மூழ்கிய கோவில்

May 5 , 2024 203 days 249 0
  • 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைத் தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவுடன் இணைக்கும் ஒரு பெரிய வணிகப் பாதை ஒன்று இருந்தது.
  • ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பரப்புப் பகுதியில் இந்தக் கோயில் பெரும்பாலும் மூழ்கியே காணப்படுகிறது.
  • அணையின் நீர்மட்டமானது 105 அடி என்ற முழு கொள்ளளவில் இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 46 அடிக்கும் கீழாக குறைந்ததைத் தொடர்ந்து, இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
  • ஒவ்வொன்றும் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 10 முதல் 15 கல்வெட்டுகள் இங்கு கண்டறியப் பட்டுள்ளன.
  • 1,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தொண்டரீஷ்வரமுடையார் (சிவன்) கோயில் அமைந்திருந்த துறைவலூர் என்ற கிராமம் அங்கு இருந்தததையும் இது வெளிப்படுத்தி உள்ளது.
  • இப்பகுதி பெருவழியாக (பிரதான நெடுஞ்சாலை) செயல்பட்டது என்பதோடு இங்கு வணிகர்கள் கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல பவானி நதி மற்றும் மோயாறு நதியைக் கடந்து சென்றனர்.
  • இப்பகுதி ஹொய்சாள ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.
  • ஹொய்சாளப் பேரரசின் கடைசிப் பெரு மன்னன் மூன்றாம் வீர பல்லலா (1292-1342) இப்பகுதியை ஆட்சி செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்