அரபிக்கடலில் நடைபெற்று வந்த இந்திய கடற்படையின், மேற்குக் கடற்படைத் தொகுதியின் முப்படை கடற்பயிற்சி (Tri-service maritime exercise), பஸ்சிம் லெகெர் நிறைவு பெற்றது.
இக்கடற் பயிற்சியின் நோக்கமானது, இந்திய கடற்படை, இந்திய தரைப் படை, இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கிடையேயான இயங்குதன்மையை ஏற்படுத்துவதேயாகும்.
மூன்று வாரமாக நடைபெற்ற இந்தப் பயிற்சியானது, இந்தியக் கடற்படையின் மேற்குக் கடற்படையின் தயார்நிலையை சோதனை செய்வதற்காகவும், செயல்பாட்டு விமானங்கள் (Operational Planes), தளவாடங்கள், நிர்வாக விமானங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை சோதனை செய்வதற்காகவும் நடத்தப்பட்டது.