சத்திஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் (Bastar region) நக்சல் செயல்பாடுகளை எதிர்ப்பதற்காக, 241 எனும் எண்ணுடைய பஸ்தாரிய படைப்பிரிவு (Bastariya Battalion) எனும் புதிய சிறப்புப் படையை மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force - CRPF) துவங்கியுள்ளது.
முதல் முறையாக மத்திய ரிசர்வ் காவல் படையானது பஸ்தார் மாவட்டத்தின் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் நக்சல் எதிர்ப்பு படையின் தாக்குதல் செயல்திறனை (combat capabilities) மேம்படுத்துவதற்காக உள்ளூர் நபர்களினையும் கொண்டு சிறப்பு படைப்பிரிவு ஒன்றினை உருவாக்கியுள்ளது.
241 எனும் எண்ணுடைய இந்த பஸ்தார் படைப்பிரிவானது மொத்தம் 739 உள்ளூர் பழங்குடியின இளைஞர்களைக் (local tribal youths) கொண்டது. அவர்களுள் 198 பேர் பெண் இராணுவ வீராங்கனைகள் (women combatant). இவர்கள் மிக அதிக அளவில் நக்சல் பாதிப்புடைய சத்திஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களான பிஜப்பூர் (Bijapur), தாண்டேவாடா (Dantewada), நாராயண்பூர் (Narayanpur), சுக்மா (Sukma) ஆகிய மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இப்படையானது நக்சல்களுக்கு எதிராகச் சண்டையிட சத்திஸ்கர் மாநிலத்தின் சிறப்பு செயல் மண்டலத்தில் (Special Operation Zone -SOZ) பணியமர்த்தப்படும்.