TNPSC Thervupettagam

பஹாரியா பழங்குடியினர்

April 26 , 2024 242 days 345 0
  • 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மலைப்பாங்கான மாவட்டங்களான பாகூர் மற்றும் கோடாவில் நான்கு சமூகங்களின் தலைமையிலான விதை வங்கிகள் அமைக்கப் பட்டன.
  • முன்பு அந்த சமூகத்தினர் வட்டிக்காரர்களிடம் விதைகளை வாங்கினர் என்ற நிலையில் அவர்கள் அறுவடையில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்துக் கொள்வர்.
  • தற்போது, 90 கிராமங்களில் உள்ள 1,350க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்குச் சேவை வழங்கும் வகையில் இந்த விதை வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் பஹாரியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • அவர்கள் சில ஆண்டுகளாக வேளாண்மைக்காக தாவரங்களை எரிப்பதன் மூலம் நிலத்தைச் சுத்தம் செய்யும் செயல்முறையினை உள்ளடக்கிய ஜூம் அல்லது மாற்று முறை சாகுபடியை பின்பற்றுகின்றனர்.
  • மலைகள் என்று பொருள்படும் பஹார் என்ற வார்த்தையிலிருந்து இது உருவானதாக அவர்கள் கருதுகின்றனர்.
  • அவர்கள் முதன்மையாக ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வாழ்கின்றனர்.
  • உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலும் இவர்களின் பிரிவினர் சிதறிக் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்