TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர்

May 31 , 2018 2274 days 674 0
  • ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தல் வரையிலான கால கட்டத்திற்கு காபந்து பிரதமராக பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாகிஸ்தானின் இடைக்கால தலைமை தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியுள்ள முல்க், தற்போதைய அரசாங்கமும் பாராளுமன்றமும் கலைக்கப்படுவதால், அடுத்த தேர்தல் நடைபெறும் வரை ஒரு தொழில்நுட்பமான அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்துவார்.

  • இந்த அறிவிப்பு சில வாரங்களாக பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷாகி கைகான் அப்பாசிக்கும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சையத் குர்ஷித் அகமது ஷாவிற்கும் இடையே நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
  • தற்போது பதவியிலிருந்து விலகும் ஷாகித் கைகான் அப்பாசி அரசாங்கம் தான் ஐந்து ஆண்டுகால பதவிக் காலத்தை முறையாக முடித்து ஜனநாயக ஆட்சி மாற்றத்தை குறிப்பிடுவதில் இரண்டாவது தடவையாகும்.
  • தமது 70 ஆண்டு கால வரலாற்றில் பாகிஸ்தான் நாடு 2013ம் ஆண்டு அப்போதைய பொதுத் தேர்தல்களில் வென்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியிடம் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிகாரத்தை கைமாற்றியதே அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிகார மாற்றமாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்