TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணம்

September 21 , 2020 1436 days 613 0
  • பாகிஸ்தான் தனது ஐந்தாவது மாகாணமாக ஆக்கிரமிக்கப்பட்ட கில்கித்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஒருங்கிணைக்கப் போகிறது.
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK - Pakistan-occupied Kashmir) இரண்டு பகுதிகளில் ஒன்றாகும்.
  • மற்றொரு பகுதி “ஆசாத் ஜம்மு-காஷ்மீர்” ஆகும்.
  • இவை இரண்டும் முந்தைய சுதேச மாநிலமான ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்.
  • அப்போதைய ஒரு பிரிட்டிஷ் அதிகாரியான கில்கிட் ஸ்கெளட்ஸ் என்பவரின் நடவடிக்கையால் இந்தப் பகுதி அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டிற்கு 1947 ஆம் ஆண்டு நவம்பரில் ஒப்படைக்கப்பட்டது.
  • இது சீனாவிற்கு நிலவழியிலான  அணுகலை வழங்குகிறது, இது ஏராளமான நன்னீர் நீர்த்தேக்கங்களையும் கொண்டுள்ளது. மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப்பாதையும் இதன் வழியாகச் செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்