பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு கரியல் (கவியாலிஸ் கேஞ்செட்டிகஸ்) தென்பட்டுள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் ராட்கிளிஃப் கோட்டின் இந்தப் பகுதியில் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்ட குழுவினைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹரிகே சதுப்பு நிலத்தில் இந்தியா கரியல் இன முதலைகளை மீண்டும் அறிமுகப் படுத்தியுள்ளது.
2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பஞ்சாப் (இந்தியா) அரசாங்கத்தின் திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் அமிர்தசரஸ், தர்ன் தரண் சாஹிப் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய மாவட்டங்களில் பாயும் பியாஸ் ஆற்றில் சுமார் 94 கரியல்கள் விடப் பட்டன.
இவை பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சம்பல் ஆற்றுப் படுகையில் இருந்து கொண்டு வரப்பட்டன.