TNPSC Thervupettagam

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் - ஆண்டின் சிறந்த ICC ஆடவர் டி20 அணியின் தலைவர்

January 22 , 2022 910 days 498 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ICC ஆடவர் T20I அணியின் தலைவராக பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ICC அமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான அணியில், ஓர் ஆண்டில் தங்கள் செயல்திறன், மட்டை வீச்சு, பந்து வீச்சு அல்லது அனைத்துச் செயல்திறன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறந்த 11 வீரர்களை அங்கீகரித்துள்ளது.
  • 11 பேர் கொண்ட இந்த அணியில் எந்த ஒரு இந்திய ஆண் வீரரும் இடம் பெறவில்லை.
  • இருப்பினும், 2021 ஆம் ஆண்டிற்கான ICC மகளிர் T20I அணியின், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டுமே ஆவார்.
  • 2018 (தொடக்க வீரர்) மற்றும் 2019 (மூன்றாமிடம்) ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டின் சிறந்த T20I அணியில் ஸ்மிருதி மூன்றாவது முறையாக  இடம் பிடித்துள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான ICC மகளிர் T20I அணிக்கான அணித் தலைவராக  இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்