கிரிக்கெட் நட்சத்திர வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (Pakistan Tehreek - e - Insat - PTI) தேசிய சட்டசபையில் 269 இடங்களில் 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் குடியியல் அரசாங்கத்திற்காக தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது தேர்தல்களில் கடைசித் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் இவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனவே அவரது கட்சி கண்டிப்பாக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இயலும்.
மாகாண அளவில்
பஞ்சாப்பில் பெரிய கட்சியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) – Pakistan Muslim League (Nawaz) or PML (N)
கைபர் பகுதுன்குவாவில் பாகிஸ்தான் இ இன்சாப்
சிந்துவில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan’s Peoples Party - PPP)
பலூசிஸ்தானில் பலூசிஸ்தான் ஆவாமி கட்சி (Balochistan Awami Party - BAP)
ஆகியவை உருவெடுத்துள்ளன.
மொத்த இடங்களில் 172 இடங்களை பெறும் கட்சி (அ) கூட்டணியே அரசினை அமைக்க முடியும்.
சபாஷ் சரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 இடங்களை வென்றுள்ளது.
தேசிய சட்டசபையின் மூன்றாவது இடத்தினை 39 இடங்களை வென்ற மத்திய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இடது சாரி அணி பெற்றுள்ளது.