எஸ்கெரிச்சியா கோலி (E. coli) எனப்படும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட பாக்டீரியத்தில் சாத்தியமானத் தகவல் நினைவக அமைப்பு காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளை அல்லது நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும், கடந்த காலச் செயல்பாட்டு அனுபவங்களின் நினைவுகளை மிகவும் நன்கு உருவாக்கி அவற்றை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு அனுப்பும் திறன் கொண்டதாக இது உள்ளது.
அவை தனது சூழலில் இருந்து தகவல்களைச் சேகரித்து சேமித்து, பின்னர் தனது பயன்பாட்டிற்காக அவற்றை அணுகுகின்றன.
உணர்வு நிலை கொண்ட மனித நினைவகத்திற்கு மாறாக, இந்த பாக்டீரிய நினைவக அமைப்பு ஆனது முன்னதாக எதிர்கொண்டவற்றின் அடிப்படையில் பல செயல்பாட்டு முடிவுகளை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.