உலக சுகாதார அமைப்பினால் (WHO) புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய பாக்டீரிய நோய்க் கிருமிகளின் முன்னுரிமைப் பட்டியல் (BPPL) வெளியிடப்பட்டது.
பல்வகை பாக்டீரியங்களுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான கிராம்-நெகட்டிவ் பாக்டீரியாக்கள் மற்றும் ரிஃபாம்பிசின் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்திற்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் ஆகியவை இதில் அடங்கும்.
நுண்ணுயிர்-எதிர்ப்பு பாக்டீரியாக்களைக் கொண்ட 15 குடும்பங்கள் முக்கியமான, உயர் நிலை மற்றும் நடுத்தர வகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கடைசியாக இது போன்றப் பட்டியலை வெளியிட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா உள்ளிட்ட உயர் முன்னுரிமை நோய்க்கிருமிகள், சூடோமோனாஸ் ஏருகினோசா மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் ஆகியவற்றுடன் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிக பாதிப்பு கொண்டவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
இவை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் சில குறிப்பிடத்தக்கச் சவால்களை முன் வைக்கின்றன.