பாக்டீரியா எதிர்ப்பு ஆராய்ச்சி பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை
June 20 , 2024 156 days 248 0
உலக சுகாதார அமைப்பானது, “2023 ஆம் ஆண்டு மருத்துவ மற்றும் மருத்துவ சிகிச்சை மேம்பாட்டிற்கு முந்தைய நிலையில் பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள்: ஒரு கண்ணோட்டம் மற்றும் பகுப்பாய்வு” என்ற தலைப்பிலான தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளாவியப் பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் இந்தியா 1% மட்டுமே பங்களிக்கிறது.
84% பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆனது அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிகம் மேற்கொள்ளப் படுகிறது என்ற நிலையில் மீதமுள்ள 12% செயல்பாடுகள் உயர்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மேற் கொள்ளப் படுகிறது.
ஆனால் இந்தியா உள்ளிட்ட கீழ்நிலையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் 4% மட்டுமே பங்களிக்கின்றன.
சீனாவிலும் ரஷ்யக் கூட்டமைப்பிலும் உருவாக்கப்படும் புதிய பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள் முறையே 3% மற்றும் 2% ஆகும்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தலா 1% அளவு பங்கினை அளிக்கின்றன.