TNPSC Thervupettagam

பாக்டீரியா எதிர்ப்பு ஆராய்ச்சி பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

June 20 , 2024 156 days 247 0
  • உலக சுகாதார அமைப்பானது, “2023 ஆம் ஆண்டு மருத்துவ மற்றும் மருத்துவ சிகிச்சை மேம்பாட்டிற்கு முந்தைய நிலையில் பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள்: ஒரு கண்ணோட்டம் மற்றும் பகுப்பாய்வு” என்ற தலைப்பிலான தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவியப் பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச்  செயல்பாடுகளில் இந்தியா 1% மட்டுமே பங்களிக்கிறது.
  • 84% பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆனது அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிகம் மேற்கொள்ளப் படுகிறது என்ற நிலையில்  மீதமுள்ள 12% செயல்பாடுகள் உயர்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மேற் கொள்ளப் படுகிறது.
  • ஆனால் இந்தியா உள்ளிட்ட கீழ்நிலையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் 4% மட்டுமே பங்களிக்கின்றன.
  • சீனாவிலும் ரஷ்யக் கூட்டமைப்பிலும் உருவாக்கப்படும் புதிய பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள் முறையே 3% மற்றும் 2% ஆகும்.
  • இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தலா 1% அளவு பங்கினை அளிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்