TNPSC Thervupettagam

பாக்டீரியா மற்றும் இறப்பு எண்ணிக்கைகள்

November 27 , 2022 599 days 336 0
  • E. கோலி, S.நிமோனியா, K. நிமோனியா, S. ஆரியஸ் மற்றும் A. பவுமானி ஆகிய ஐந்து வகையான பாக்டீரியாக்கள் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான 6.8 லட்சம் இறப்புகளுக்குக் காரணமாக இருந்தன.
  • இந்த ஆய்வறிக்கையானது லான்செட் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான 1,57,082 (1.57 லட்சம்) உயிர்களைப் பலி வாங்கிய ஈ.கோலி மிகக் கொடிய நோய்க் கிருமியாகும்.
  • பொதுவாக ஏற்படும் பாக்டீரியத் தொற்றுகள் 2019 ஆம் ஆண்டில் பதிவான உயிரிழப்புகளுக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகும்.
  • இவை உலகளவில் பதிவான எட்டில் ஒரு உயிரிழப்பிற்குக் காரணமானவையாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் பதிவான 7.7 மில்லியன் (77 லட்சம்) உயிரிழப்புகள் 33 பொதுவான பாக்டீரியா தொற்றுகளுடன் தொடர்புடையவையாகும்.
  • இந்த ஐந்து பாக்டீரியாக்கள் மட்டுமே அனைத்து உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன.
  • E. கோலி, S.நிமோனியா, K. நிமோனியா, S. ஆரியஸ் மற்றும் P. ஏறுகினோசா ஆகிய ஐந்து நோய்க் கிருமிகள், இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட பாக்டீரியாக்களில் 54.2% உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
  • 1.1 மில்லியன் உயிரிழப்புகளோடு, உலகளவில் பதிவான அதிக உயிரிழப்புகளோடுத் தொடர்புடைய நோய்க் கிருமி S. ஆரியஸ் ஆகும்.
  • 100,000 பேருக்கு 230 உயிரிழப்புகளுடன் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியில் அதிக இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
  • 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஏற்படும் அதிக உயிரிழப்புகள் (49,000 இறப்புகள்) சால்மோனெல்லா என்டெரிகா செரோவர் டைபி என்ற பாக்டீரியத்தினால் ஏற்படுபவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்