POP-FAME என்ற ஸ்ட்ரெப்டோமைசஸ் பாக்டீரியா மூலம், பூஞ்சை எதிர்ப்பு மூலக்கூறின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட உயிரி எரிபொருள் எதிர்காலத்தில் மேற் கொள்ளப் படும் ராக்கெட் ஏவுதல்களில் பயன்படுத்தப்படலாம்.
POP-FAME என்பது ‘பாலிசைக்ளோப்ரோபனேட்டட் அமில மெத்தில் எஸ்டர்’ என்பதைக் குறிக்கிறது.
இது தற்போது பயன்படுத்தப்படும் ராக்கெட் எரிபொருட்களை விட கணிசமாக அதிக ஆற்றலைக் கொண்டிருக்கலாம்.
இது பெட்ரோலியத்தில் இருந்து உருவாக்கப்படும் மற்ற எந்த எரிபொருளையும் ஒப்பிடும் போது அதிலுள்ள பசுமை இல்ல வாயுவின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது.
POP-FAME எரிபொருளின் மூலக்கூறு அமைப்பானது சின்டின் என்பதினை ஒத்துள்ளது.
இருப்பினும், ராக்கெட்டின் அதிக எடையைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மூலக் கூறிலும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை அகற்றுவது சவாலான ஒன்றாகும்.