TNPSC Thervupettagam

பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை

August 28 , 2022 821 days 477 0
  • இரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தச் செய்வதற்கான உலக நாடுகளின் அனைத்துச் சாதனைகளையும் முறியடிக்கும் பயணத்தில் இந்தியா உள்ளது.
  • 1950 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒட்டு மொத்தமாக கட்டமைக்கப் பட்டதை விட 2025 ஆம் ஆண்டில், இந்திய அரசு அதிக அளவில் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் பாதைகளைக் கட்டமைக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 1.2 லட்சம் கிமீ தூர இரயில் பாதைகளையும் 1.8 லட்சம் கிமீ தூர நெடுஞ்சாலைகளையும் கட்டமைத்திருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது.
  • 1950 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்திய அரசு 4,000 கிலோமீட்டர் தொலைவு வரை தேசிய நெடுஞ்சாலைகளை மட்டுமே உருவாக்கியது.
  • இது 2015 ஆம் ஆண்டில் மொத்தம் 77,000 கிலோமீட்டர் என்ற அளவில்  நெடுஞ்சாலை அமைப்பினைக் கட்டமைத்தது.
  • இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலையின் நீளம் ஆனது பத்து ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட சாலை நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக 1.8 லட்சம் கிலோ மீட்டர்களைக் கடக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10,000 கிலோமீட்டர் இரயில் பாதைகள் மட்டுமே இருந்தது.
  • இது 2015 ஆம் ஆண்டில் 63,000 கிலோ மீட்டராக அதிகரித்தது.
  • ஆனால் இது 2025 ஆம் ஆண்டில் 1.2 லட்சம் கிலோமீட்டரைத் தொடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • 1995 ஆம் ஆண்டில் 777 MTPA ஆக இருந்த துறைமுகச் சரக்கு கையாளும் திறன் ஆனது 2015 ஆம் ஆண்டில் 1,911 MTPA ஆக உயர்ந்துள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டில் 3,000 MTPA என்ற அளவில் இருமடங்கிற்கும் அதிகமாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்