பாங்சாவ் கணவாய் சர்வதேசத் திருவிழாவானது, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்போங் எனுமிடத்தில் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவானது, அதன் கலாச்சாரம் மற்றும் இன்ன பிற அம்சங்களை காட்சிப் படுத்துவதற்காக, அண்டை நாடான மியான்மருடனான பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குகிறது.
பாங்சாவ் கணவாய் அல்லது பான் சாங் கணவாய் ஆனது 3,727 அடி (1,136 மீ) உயரத்தில் அமைந்துள்ளது.
இது இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள பட்காய் மலையின் உச்சியில் உள்ளது.
அசாம் சமவெளியில் இருந்து பர்மாவிற்கு செல்வதற்கான எளிதான வழிகளை இந்தக் கணவாய் வழங்குகிறது.
இந்தோ-பர்மா பட்காய் மலைத்தொடரில் உள்ள மிகக் கடினமான நிலப்பரப்புகளின் காரணமாக இந்த பாங்சாவ் கணவாய் ஆனது "நரக வாசல்" அல்லது "நரகக் கணவாய்" என்று அழைக்கப்படுகிறது.