TNPSC Thervupettagam

பாசிட்ரோனியத்தினை சீரொளிக் கற்றை மூலமாக குளிரூட்டல்

February 29 , 2024 141 days 207 0
  • முதன்முதலில், இயற்பியலாளர் கூட்டமைப்பின் ஒரு சர்வதேசக் குழுவானது பாசிட்ரோனியத்தினை சீரொளிக் கற்றை மூலமாக குளிரூட்டல் செயல்முறையினை செயல் விளக்கிக் காட்டியதன் மூலம் ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளது.
  • இந்த உருவாக்கமானது இந்த அசாதாரணமான, ஆனால் எளிமையான பருப்பொருள்-எதிர் பருப்பொருள் கட்டமைப்பின் பண்புகள் மற்றும் ஈர்ப்பு செயல்பாடுகள் ஆகியவற்றின் அதி துல்லியமான அளவீடுகளை மதிப்பிட வழி வகுக்கும்.
  • ஒன்றிணைந்த எலக்ட்ரான் (e-) மற்றும் பாசிட்ரான் (e+) ஆகியவற்றை உள்ளடக்கிய பாசிட்ரோனியம் ஒரு அடிப்படை அணு அமைப்பு ஆகும்.
  • மிகக் குறுகிய ஆயுட்காலம் கொண்டுள்ளதன் காரணமாக, அது சுமார் 142 நானோ வினாடிகள் என்ற அரை- வாழ்வு காலத்துடன் அழிகிறது.
  • எலெக்ட்ரான் நிறையில் இருமடங்கு நிறையைக் கொண்டுள்ள இது ஒரு தூய லெப்டோனிக் அணு என்ற தனித்துவமான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
  • உயர் ஆற்றல் நிலை மாற்றத்திற்கான பாதியளவு அதிர்வெண்களுடன் கூடிய, ஹைட்ரஜன் அணுவை ஒத்த இந்த அணு அமைப்பு ஆனது, சீரொளிக் கற்றை மூலமாக குளிரூட்டல் செயல்பாடுகளை மேற்கொள்ள முயற்சிப்பதற்கான ஒரு சிறந்த மாற்று அமைப்பாக அமைகிறது.
  • ஜெனீவாவில் உள்ள CERN எனப் பிரபலமாக அறியப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பில் இது பரிசோதனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்