TNPSC Thervupettagam

பாசிபிள் திட்டம்: நிர்மல் பூர்ஜா, நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரர்

October 31 , 2019 1733 days 670 0
  • முன்னாள் பிரிட்டிஷ் கூர்க்கா படை வீரரும் நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரருமான நிர்மல் பூர்ஜா என்பவர் பூமியில் உள்ள 8000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட ஒவ்வொரு மலையையும் ஏறிய  ‘வேகமான நபராக’ உருவெடுத்துள்ளார்.
  • இந்தப் பட்டியலானது கிழக்கு இமய மலையில் உள்ள எவரெஸ்ட் முதல் பாகிஸ்தானின் காரகோரம் மலைகளில் உள்ள கே2 வரை கொண்டுள்ளது.
  • அவர் வெறும் ஆறு மாதங்கள் மற்றும் ஆறு நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • இத்தாலிய மலை ஏறும் வீரரான ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர் என்பவர் 1986 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். அவ்வாறு மலை ஏற அவருக்கு 16 ஆண்டுகள் ஆனது.
  • பிரிட்டிஷ் கூர்க்கா படைப் பிரிவின் உயரடுக்குச் சிறப்புப் படைகளில் பூர்ஜா ஒரு தீவிர குளிர்காலச் சூழ்நிலையில் பணியாற்றும் போர் வீரராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்