TNPSC Thervupettagam

பாசுமதி புவிசார் குறியீடு

March 15 , 2020 1627 days 1959 0
  • புகழ்பெற்ற ‘பாசுமதி’ புவிசார் குறியீடு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் சேருவதற்கான மத்தியப் பிரதேச அரசின் முயற்சியானது மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
  • தன்னுடைய மாநிலத்தின் சில பகுதிகளில் பயிரிடப்படும் பாசுமதி நெல்லுக்குப் புவிசார் குறியீடு (geographical indication - GI) வழங்கக் கோரிய மத்தியப் பிரதேச மாநிலத்தின் மனுவை மதராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • ஒரே பொருளுக்கு இரண்டு GI சான்றிதழ் பதிவுகளை வழங்க முடியாது என்று இந்த நீதிமன்றம் கூறியுள்ளது.

பின்னணி

  • 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் பஞ்சாப், ஹரியானா, தில்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படும் பாசுமதிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஆனால் மத்தியப் பிரதேசம் தனது மாநிலப் பகுதியின் கீழ் உள்ள 13 மாவட்டங்களைப் பாரம்பரிய பாசுமதி வளரும் பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியது.
  • தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் (intellectual property rights - IPRs) ஒரு அங்கமாக புவியியல் குறியீடுகள் உள்ளன.
  • GI ஆனது உலக வர்த்தக அமைப்பின் (WTO - World Trade Organisation) அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS - Trade-Related Aspects of Intellectual Property Rights) மீதான ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இந்தியாவில், புவிசார் குறியீட்டுப் பதிவு ஆனது பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 ஆல் நிர்வகிக்கப் படுகின்றது. இது 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • புவிசார் குறியீடு வழங்கப்பட்ட முதலாவது இந்தியப் பொருள் டார்ஜிலிங் தேநீர் ஆகும். இதற்கு 2004-05 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்