தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
இது இந்தியக் கடல் பகுதியிலிருந்து அறிவியல் ரீதியாக விவரிக்கப்பட்ட மூன்றாவது மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கண்டறியப்பட்ட இரண்டாவது கடல் வாழ் டார்டிகிரேடு (மெது நடையன்) இனமாகும்.
சந்திரயான்-3 நிலவு ஆய்வுக் கலத்தின் பெயரால் இதற்குப் பாட்டிலிப்ஸ் சந்திரயாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
டார்டிகிரேடுகள் உண்மையான கரடிகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றாலும், பொதுவாக 'நீர்க் கரடிகள்' என்று அழைக்கப்படும் நுண்ணிய அளவிலான அற்புத இனங்கள் ஆகும்.
பாட்டிலிப்ஸ் சந்திராயணி என்பது பட்டிலிப்ஸ் இனத்தின் கீழ் விவரிக்கப்பட்ட 39வது இனமாகும்.
இதுவரையில் அறியப்பட்ட அனைத்து டார்டிகிரேடு இனங்களில் 17% கடல் வாழ் டார்டி கிரேடுகளாகும்.