சீனாவின் உஹான் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற 2018-ஆம் ஆண்டிற்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தைவானைச் சேர்ந்த டை ஜு யங் (Tai Tzu Ying) உடனான அரையிறுதிப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்டதன் மூலம் சாய்னா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இப்போட்டியில் இந்தியாவின் S. பிரன்னாய், சீனாவின் சென்லாங் உடனான அரையிறுதிப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்டதன் மூலம் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு கண்டங்கள் அளவிலான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளின் (continental championships) இரண்டாவது பதிப்பில் இந்தியா இரு பதக்கங்களை வெல்வது இதுவே இரண்டாவது முறையாகும்.
மேலும் இப்போட்டியில் இது சாய்னா நேவாலுக்கு மூன்றாவது பதக்கமாகும். மேலும் இந்த ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் பிரன்னாய் ஆவார்.
இதற்கு முன் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், சாய்னா நெஹ்வால் 2010-ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தினையும், P.V. சிந்து 2014-ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
இந்த கண்ட அளவிலான பாட்மின்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ள ஒரே இந்தியர் இந்திய பாட்மின்டன் வீரரான கண்ணா மட்டுமே ஆவார்.