பாண்டாக்களைப் பரிசாக வழங்கும் கொள்கையின் மறுமதிப்பீடு
March 5 , 2024 265 days 231 0
பாண்டா வளங்காப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களுடன் சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
விரைவில் ஒரு ஜோடி பாண்டாக்கள் அமெரிக்க உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட உள்ளன.
இது 'பாண்டாக்களை பரிசாக வழங்கும் அரசு முறைக் கொள்கை' முறையை மீண்டும் தொடங்குவதாக கருதப்படுகிறது.
பாண்டாக்கள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவை என்ற நிலையில், தற்போது அவை காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
1957 முதல் 1982 ஆம் ஆண்டு வரை, சோவியத் ஒன்றியம், வட கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ ஆகிய ஒன்பது நாடுகளுக்கு மொத்தம் 23 பெரிய பாண்டாக் கரடிகளை சீனா பரிசாக வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில், IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பாண்டாக்களுக்கான அச்சுறுத்தல் நிலை "அருகி வரும் இனம்" என்ற நிலையில் இருந்து "எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம்" என்று குறைக்கப்பட்டது.