இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கல்வெட்டு அறிவியல் ஆய்வாளர்கள் மதுரை மாவட்டத்தின் மேலூர் தாலுக்காவில் உள்ள கம்பூர் அருகே அமைந்த மலைக் குன்றுகளில் கிடைத்த மூன்று கல்வெட்டுகளில் உள்ள சில தகவல்களைப் படியெடுத்து உள்ளனர்.
இந்தக் கல்வெட்டுகள் ஆனது, 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
இதன் முதல் கல்வெட்டில் பாஸ்கரன் என்ற கிராமத் தலைவர் அங்கிருந்த ஒரு சிவன் கோவிலுக்கு நிலத்தினைத் தானமாய் அளித்ததை அது குறிப்பிடுகிறது.
மற்ற இரண்டு கல்வெட்டுகளில் கம்பூர் மக்கள் பற்றியத் தகவலும், தென்ன கங்க தேவன் என்ற மற்றொரு கிராமத் தலைவன் சிறப்புப் பூஜைகளுக்காக நிலத்தினைத் தானமாக வழங்கிய தகவலும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் கம்பூர் ஒரு காலத்தில் கம்பவூர் என்றும், நத்தத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் துவாரபதி நாடு என்றும் அழைக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்துகின்றன.