TNPSC Thervupettagam
August 25 , 2022 698 days 387 0
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது மெக்சிகோ பயணத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வேளாண் அறிவியலாளரான பாண்டுரங் கான்கோஜி என்ற இந்தியரின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.
  • இவர் மகாராஷ்டிராவில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வேளாண் நிபுணர் ஆவார்.
  • கான்கோஜி காதர் கட்சியின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
  • 1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற மெக்சிகன் புரட்சி என்பது சர்வாதிகார ஆட்சியை அகற்ற வழி வகுத்ததோடு அது கான்கோஜிக்கு வெகுவாக உத்வேகம் அளித்தது.
  • இவர் அமெரிக்கப் பண்ணைகளில் பணி புரியும் இந்தியர்களுடன் இந்தியச் சுதந்திரம் பற்றியக் கருத்துகளை விவாதிக்கும் நோக்கத்துடன் அவர்களை அணுகினார்.
  • இவர் பாரீஸில் இருந்த பிகாஜி காமாவை அணுகி, அவரைச் சந்தித்ததோடு, ரஷ்யாவில் விளாடிமிர் லெனினைச் சந்தித்தார் மற்றும் மற்றத் தலைவர்கள் மத்தியில் இந்தியப் பிரச்சினைக்கு வேண்டிய ஆதரவினையும் கோரினார்.
  • எனினும், அவர் ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தப்படுதல் என்ற தண்டனையை எதிர் கொள்ள நேர்ந்ததால், இந்தியாவுக்கும் செல்ல முடியாத நிலையில், மெக்சிகோவில் தஞ்சம் புகுந்தார்.
  • மெக்ஸிகோ நகருக்கு அருகில் உள்ள சாபிங்கோவில் உள்ள தேசிய வேளாண்மைப் பள்ளியில் அவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
  • சோளம், கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் ரப்பர் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து, அவற்றுள் உறைபனி மற்றும் வறட்சியைத் தாங்கும் வகைகளை அவர் உருவாக்கச் செய்தார்.
  • இவர் மெக்சிகோவில் ஒரு புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளராக மதிக்கப் பட்ட நிலையில் மெக்சிகோவில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வருவதற்கான சில முயற்சிகளின் ஒரு அங்கமாக விளங்கினார்.
  • 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாண்டுரங் இந்தியா திரும்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்