நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்காகப் பாதம் பாதுகாப்போம் என்ற திட்டத்தினைத் தொடங்க தமிழக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் ஆனது நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், அதனால் காலை எடுக்க வேண்டிய அவசியத்தினைத் தடுக்க வேண்டியும் உதவுகிறது.
2336 ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி விரைவில் கிடைக்கப் பெறும்.